இன்றே தொடங்கட்டும்
உச்சி நோக்கிய உங்கள் கல்விப் பயணம்
தனித்துவமான உத்திகளோடு நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இணையவழிக் கற்கை நெறிகள்
நீங்கள் கற்க விரும்புவது?
Featured Courses
நாம் பரிந்துரைக்கும் கற்கை நெறிகள்
உச்சி.காம்: அடுத்த தலைமுறைக்கான தமிழ்க்கல்வி
அன்றாடம் 20 நிமிடங்கள் செலவிட்டு நீங்கள் விரும்பும் துறையில் தேர்ச்சி அடைந்துகொள்ளுங்கள்!
எளிமை, ஆழம்
ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறைகள். எளிமையான விளக்கங்களில் தொடங்கி ஆழமான அறிவுக்கு இட்டுச்செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட பாடங்கள்.
காட்சி மற்றும் காணொளி
படங்கள், காணொளிகள் மற்றும் வரைபடங்கள் வழியான எமது கற்பித்தல் உத்தி கற்றதை மனதில் நன்கு பதித்துக்கொள்வதற்கு உதவுகிறது.
பலவகைப் பயிற்சிக் கேள்விகள்
பாட முடிவில் தரப்படும் பலவகைப் பயிற்சிக் கேள்விகள் மீட்டலுக்கும் புரிதலைச் சரிபார்த்துக் கொள்வதற்கும் உதவுகின்றன.
24 X 7 எந்நேரமும் கற்கலாம்
உங்கள் வசதிக்கு ஏற்றபடி நேரம் ஒதுக்கிப் படிக்கலாம். ஒரு நாளில் குறைந்தது 20 நிமிடங்கள் ஒதுக்குவது பரிந்துரைக்கப்படுகிறது.
தேர்ச்சிச் சான்றிதழ்
கற்கை நெறியின் முடிவில் எமது இணையவழித் தேர்வில் பங்கேற்று உங்கள் தேர்ச்சியை உறுதி செய்துகொள்ளலாம்.
உடனடி உதவி
கற்றலின்போது தொழினுட்ப இடர்பாடுகளை எதிர்கொண்டால் எமது வாடிக்கையாளர் பிரிவினர் உடன் உதவக் காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
(பாவலர் மதுரன் தமிழவேளின் யாப்பிலக்கணம்)
நல்ல வளமையான கருத்துகளின் வழி எடுத்துக்காட்டுகளோடு வழங்கப்படும் பாவிலக்கணப் பயிற்சி விளங்கச் செய்கிறது. சிறப்பான பாட விளக்கங்கள். நல்ல தமிழ்க் கவிதைகள் படைக்க ஊக்கம் பிறக்கிறது!
தென்றல் கோவிந்தராசன்
மருத்துவர், சென்னை, தமிழ்நாடு
(பாவலர் மதுரன் தமிழவேளின் யாப்பிலக்கணம்)
இந்தக் கற்கை நெறி மூலம் நான் அடைந்த பயன்கள் பல. செய்யுள்கள்/பாக்கள் இயற்றுவதற்கான விதிமுறைகளோடு, எண்ணத்தை ஒருமைப் படுத்திச் சரியான வார்த்தைகளைக் கோத்துப் பாக்கள் புனையவும் கற்றேன். ஆசிரியர் கற்பித்த விதம் சிறப்பு. ஒலி பற்றிய சிந்தனையில் தொடங்கி, யாப்பிலக்கண விதிகளை முறையாக அறிமுகப் படுத்திப் பயிற்சிகளின் மூலம் தேர்ச்சி பெற வைத்தார்.
பாலா மாணிக்கம்
கணித முதுகலைப் பட்டதாரி, தகவல் தொழினுட்ப முகாமையாளர், Avon, Indiana, USA
(பாவலர் மதுரன் தமிழவேளின் யாப்பிலக்கணம்)
இக்கற்கை நெறியின் ஆகச் சிறந்த விடயமாக ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் தரப்படும் பயிற்சிகளைக் கூறலாம். இப்பயிற்சிகளே மென்மேலும் யாப்பியல் விதிமுறைகளை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வழிவகுத்தன..
மிக நேர்த்தியான முறையில் கற்பிக்கும் திறன்பெற்ற ஆசிரியரிடம் கல்வி கற்ற பயனைப் பெறமுடிந்தது. சிறந்த பயிற்சி முறைகள், வகுப்பில் ஏற்படும் ஐயங்களைச் சரியான முறையில் களைதல் போன்றவை ஆசிரியரிடம் யாம் பெற்ற பயன்
முனைவர் மா.வசந்தகுமாரி
தமிழியல் ஆய்வாளர், தாரமங்கலம், தமிழ்நாடு