About Us
தொலைதூரம் போகாமல் வீட்டில் இருந்தபடியே விரும்பியவற்றைக் கற்க தமிழில் ஒரு தளம்
வீட்டில் இருந்தபடியே ஒருவர் விரும்பிய எதையும் தேடிப் படிக்கக்கூடிய நிலைக்கு உலகம் இன்று வளர்ச்சி கண்டுள்ளது. ஆங்கிலம் முதலான உலக மொழிகளில் இப்படியான வலைத்தளங்கள் ஏராளம் உள. தமிழில் இது சார்ந்து நிலவும் இடைவெளியை நிரப்பக் கூடிய விதத்தில் ஐபிசி தமிழ் ஊடகக் குழுமத்தால் ‘உச்சி’ வலைத்தளம் உருவாக்கப்பட்டு சுற்றுக்கு வருகிறது.
நிறுவனத் தலைவரின் உள்ளத்தில் இருந்து
திரு கந்தையா பாஸ்கரன், தலைவர், IBC தமிழ் ஊடகக் குழுமம்
வேகமாக மாறி வரும் உலகில் காலத்துக்கு ஏற்ற கற்றல் அணுகுமுறைகளை நாம் கண்டடைய வேண்டியுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, வகுப்பறையைத் தாண்டி வலைத்தளங்கள் வழியாகக் கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது சார்ந்த தேவைகளும் கூடியுள்ளன.
உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஊடக சக்தியாக இயங்கி வரும் ஐபிசி தமிழ் குழுமம் மேற்சொன்ன தேவையைக் கருத்தில் கொண்டு உச்சி.காம் தளத்தை உருவாக்கியுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் புதிய தலைமுறை தமிழை மறந்து விடக்கூடாது என்பது ஐபிசி தமிழ் ஊடகக் குழுமம் உருவாக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்று.
கல்வியூட்டலின் வழி அதனைச் சாத்தியப்படுத்தும் தளமாக ‘உச்சி’ உருவாகியுள்ளது. மொழிக்கல்விக்கு முதன்மை தரப்பட்டிருந்தாலும் இனிவரும் காலங்களில் வீட்டில் இருந்தபடியே வெவ்வேறு கலைகளையும் அறிவுத்துறைசார் விடயங்களையும் பயிலக்கூடிய தளமாக இது வளரும்.
இன்று விதையாக உருப்பெறும் எண்ணம் நாளை மரமாகிறது. பெருமரமாக வளரக் கூடிய அறிவு விதைகளை உங்கள் உள்ளத்தில் ஊன்றிப் பதிக்கக் கூடிய கற்கை நெறிகளை நாம் வடிவமைத்துள்ளோம். நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் பயன்பெறுவதோடு மற்றவர்களிடத்திலும் ‘உச்சி’ பற்றி எடுத்துச்சொல்லுங்கள். அவர்களையும் பயனடையச் செய்யுங்கள்.
அரியதோர் அறிவைத் திறம்பட மற்றவர்களுக்குப் புகட்டும் வல்லமை உள்ளவர் நீங்கள் என்றால் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். நீங்களும் உங்களால் பலரும் பயன்பெறக் கூடிய வகையில் இந்தத் தளத்தை வடிவமைத்துள்ளோம்.

A proud venture of 
About IBC Tamil
uchchi.com is owned and operated by IBC Tamil. Formerly the International Broadcasting Corporation for Tamil, IBC Tamil is a multimedia company offering subscription-free Tamil radio, television, magazine and online services across the globe. In 1997 IBC Tamil began as a radio station reaching out to Tamil people living all over the world, in the UK, Europe and the Middle East – soon to expand to Canada. We now run the world’s largest 24-hour Tamil radio station, boasting a core audience of over one million and growing.
உச்சி பிறந்த கதை
கோவிட் தொற்றுக் காலத்தில் பாவலர் மதுரன் தமிழவேள் நடத்திய இணையம் வழியான தமிழ் வகுப்புகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து, கற்றுப் பயனடைந்தனர். குறிப்பாகப் பாவலரின் மரபுக் கவிதை இலக்கண வகுப்புகளுக்குப் பெருவரவேற்பு இருந்தது. இதன் நீட்சியாக, இக்காலத்துக்கு உரிய தேவையை உணர்ந்து ஐபிசி தமிழ் ஊடகக் குழுமம் வாயிலாக ‘உச்சி’ உருவாக்கப்பட்டுள்ளது.
கற்பித்தலில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
உச்சி தளத்தில் உங்கள் கற்கை நெறியையும் நீங்கள் வலையேற்றலாம். மேலும் தகவல்கள் அறிய எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.