5.00
(2 Ratings)

அடிப்படைத் தமிழ் இலக்கணம் 1

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

தமிழில் பிழையில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் ஒருவர் தெரிந்திருக்க வேண்டிய இலக்கண அடிப்படைகளை இக்கற்கை நெறி எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் விளக்குகிறது.

இலக்கணம் என்றாலே கசப்பானது – கடினமானது – என்ற மாயையைத் தகர்த்தெறியும் விதமாகப் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கதைகூறும் பாணியில் காட்சி விளக்கங்களோடு இவ்வாறு இலக்கணம் கற்பிக்கப்படும்போது நுட்பமான விதிகள் எல்லாம் பசு மரத்து ஆணிபோல உடனடியாக உள்ளத்தில் பதிந்து போகின்றன. ஒவ்வொரு பாட முடிவிலும் தரப்படும் பல்வகைப் பயிற்சிகள் கற்றதை நினைவில் நிறுத்துவதற்கும் மீட்டுப் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றன.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் 1: எழுத்திலக்கண அடிப்படைகளை  விளக்குகிறது.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் 2 கற்கை நெறியைத் தொடர்வதற்கு முதலாவது கற்கை நெறியை நிறைவு செய்திருத்தல் அவசியமாகும்.

Course Content

இலக்கணம்: அறிமுகம்
ஏன் நாம் தமிழ் இலக்கணம் படிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. இலக்கணத்தின் வகைமைகளை விளக்குகிறது.

எழுத்து: அறிமுகம்
எழுத்து என்ற எண்ணக்கருவை எவ்வாறு வரையறுப்பது என்பதை இப்பகுதி ஆராய்கிறது

எழுத்தின் அடிப்படை
வெவ்வேறு பெறுமானங்களின் (values) அடிப்படையில் தமிழ் இலக்கணம் எழுத்துகளைப் பல வகைகளாகப் பகுத்து விளக்குகிறது. அவற்றுள் ஒவ்வொன்றையும் பார்க்கலாம்.

எழுத்தின் வகைமை – தொடர்ச்சி
இன எழுத்து, சுட்டெழுத்து, வினா எழுத்து முதலானவற்றை இப்பகுதி விளக்குகிறது

எழுத்துச்சாரியை
எழுத்துகள் சாரியை பெறும் முறை இப்பாடத்தில் விளக்கப் பெற்றுள்ளது

பிற சார்பெழுத்துகள்
உயிர்மெய், ஆய்தம் ஆகிய சார்பெழுத்துகள் பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இவற்றைத் தவிர வேறு சில சார்பெழுத்துகளும் உள்ளன. இவை பற்றிய விளக்கம் இப்பகுதியில் இடம்பெறுகிறது.

Student Ratings & Reviews

5.0
Total 2 Ratings
5
2 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
SK
2 months ago
தமிழில் படித்து தமிழில் எழுதி தமிழில் சிந்தித்தாலும் இலக்கண அடிப்படைகள் சரியாக கைவராத குற்ற உணர்ச்சி எப்போது உறுத்தியது உண்டு, ஒரு வித சந்தேகத்துடன் தான் இந்த பாடத்தை வாங்கினேன், ஆனால் பாடத்திட்டம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, நம்மை நாமே மதிப்பாய்வு செய்துக் கொள்ள பயிற்சி தேர்வுகள் உதவுகின்றன. மொத்தத்தில் உலகத்தரத்திலான ஒரு கற்றல் தளத்தை தமிழில் பார்ப்பதில் மகிழ்ச்சி. இன்னும் பல துறைகளைச் சேர்ந்த பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
NS
2 months ago
முதல் மூன்று பாடங்களை முடித்திருக்கிறேன். இப்போதே ஆசிரியரின் தனித்திறமை தெரிகிறது. தமிழ் இலக்கணத்தை இவ்வளவு எளிமையாகவும் விளக்கமாகவும் இதற்கு முன் யாருமே எனக்குச் சொல்லித் தந்ததில்லை. அருமையான பாடங்கள். படித்தவற்றை நினைவில் நிறுத்துவதற்குப் பயிற்சிக் கேள்விகள் பெரிதும் துணை புரிகின்றன.
Shopping Cart
Ask ChatGPT
Set ChatGPT API key
Find your Secret API key in your ChatGPT User settings and paste it here to connect ChatGPT with your Tutor LMS website.

Want to receive push notifications for all major on-site activities?