(கற்கை நெறியின் சில காணொளிப் பாடங்களைக் கட்டணமின்றி இப்பக்கத்தில் நீங்கள் பார்த்தறிந்து கொள்ளலாம்)
தமிழில் பிழையில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் ஒருவர் தெரிந்திருக்க வேண்டிய இலக்கண அடிப்படைகளை இக்கற்கை நெறி எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் விளக்குகிறது.
இலக்கணம் என்றாலே கசப்பானது – கடினமானது – என்ற மாயையைத் தகர்த்தெறியும் விதமாகப் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கதைகூறும் பாணியில் காட்சி விளக்கங்களோடு இவ்வாறு இலக்கணம் கற்பிக்கப்படும்போது நுட்பமான விதிகள் எல்லாம் பசு மரத்து ஆணிபோல உடனடியாக உள்ளத்தில் பதிந்து போகின்றன. ஒவ்வொரு பாட முடிவிலும் தரப்படும் பல்வகைப் பயிற்சிகள் கற்றதை நினைவில் நிறுத்துவதற்கும் மீட்டுப் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றன.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் 1: எழுத்திலக்கண அடிப்படைகளை விளக்குகிறது.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் 1 கற்கை நெறியைத் தொடர்வதற்கு முதலாவது கற்கை நெறியை நிறைவு செய்திருத்தல் அவசியமாகும்.
Reviews
There are no reviews yet.