,

சிறுவர்களுக்கான தமிழ்

£40.00

+ Free Shipping

 

அருகில் இருந்து உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித்தர ஓர் ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம்.

உச்சி.காம் இன் ‘சிறுவர்களுக்கான தமிழ்’ வலைவழிக் கற்கை நெறி இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அசையும் வண்ண ஓவியங்கள், சிறு சொற்களைக்கொண்டு புனையப்பட்ட அழகிய பாடல்கள், ஆத்திசூடி, திருக்குறள் முதலான அறநூல்கள் பற்றிய விளக்கம், தமிழர் மரபு பற்றிய அறிமுகம் முதலானவை காணொளிப் பாடங்களாக (Video lessons) உள்ளடக்கப்பட்டுள்ளன.

(சில காணொளிப் பாடங்களைக் கட்டணமின்றி நீங்கள் இங்கே காணலாம்.)

 

அடிப்படைகளில் இருந்து ஆரம்பித்து வளர் நிலை நோக்கி மாணவரை வழி நடத்திச் செல்லும் வகையில் இந்தக் கற்கை நெறியின் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காட்சி, குரல் ஆகிய இரண்டு ஊடகங்கள் வழியாகவும் பாடம் சொல்லித்தரப்படுகிறது.

ஒவ்வொரு பாடமும் சிறுவர்தம் கற்றல்சார் உளவியலை உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்தின் முடிவில் கற்றவற்றை நினைவுபடுத்திக் கொள்ளப் பல்வகைப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன.

 

யாருக்கானது இக்கற்கை நெறி:

  • 6 இலிருந்து 13 வயது வரையான சிறுவர்களுக்கு உகந்தது.
  • பள்ளியில் தமிழ் அல்லாத பிறமொழிகள் வழியாகப் பயிலும் மாணவர்களுக்கு உகந்தது.

கற்கை நெறியை நிறைவு செய்வோர் uchchi.com – IBC தமிழ் இணைந்து வழங்கும் மின்சான்றிதழைப் பெற்றுக்கொள்வர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிறுவர்களுக்கான தமிழ்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart
× Chat