இலக்கணப் பிழையில்லாமல் மரபுக் கவிதைகள் புனைய விரும்புவோரும்,
தரப்பட்ட மெட்டுக்குத் திறம்படப் பாட்டெழுதும் பாடலாசிரியராக வர விரும்புவோரும்
தவற விடக்கூடாத கற்கை நெறி இது.
இதன் சில காணொளிப் பாடங்களைக் கட்டணமின்றி நீங்கள் கீழே காணலாம்.
சிக்கலானவை என்று கருதப்படும் யாப்பிலக்கண நுட்பங்கள், எல்லோரும் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் எளிமையும் புதுமையும் கொண்ட காணொளிப் பாடங்களாக (video lessons) இக்கற்கை நெறியில் விளக்கப்பெற்றுள்ளன. பாவலர் மதுரன் தமிழவேள் இணையவழி நேர்முக வகுப்புகளாக இப்பாடங்களைக் கற்பித்தபோது நூற்றுக் கணக்கானவர்கள் பயின்று பயனடைந்தனர். (ஏற்கனவே கற்றவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே காணலாம்)
ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தரப்படும் பல்வகைப் பயிற்சிகள் கற்றுக்கொள்வதை நினைவில் நிலை நிறுத்த உதவுகின்றன; தேர்ச்சியை உறுதி செய்கின்றன.
தமிழ்மொழியின் அழகையும் செழுமையையும் ஆழத்தையும் அறிய விரும்பும் அனைவரும் இந்தக் கற்கை நெறியின் மூலம் பயன் பெறலாம்.
கற்கை நெறியை நிறைவு செய்வோர் uchchi.com – IBC தமிழ் இணைந்து வழங்கும் மின்சான்றிதழைப் பெற்றுக்கொள்வர்.
‘யாவர்க்கும் யாப்பிலக்கணம் -1’ கற்கை நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளவை:
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்பியல் பாடங்கள் விரிவாகவும் நுண்மையாகவும் விளக்கப்பட்டுள்ளன. அடிப்படைகளில் தொடங்கி ஆழம் நோக்கிச் செல்லும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
‘மெட்டுக்குப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்ற ஒரு சிறப்புப்பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்கள், விருத்தம், துறை, தாழிசை ஆகிய பாவினங்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறுகிறது.
செய்யுளியல் நுட்பங்களை உள்ளடக்கி வரப்போகும் யாவர்க்கும் யாப்பிலக்கணம் 2, யாவர்க்கும் யாப்பிலக்கணம் 3 பாடங்களை விளங்கிக்கொள்வதற்கு இக்கற்கை நெறியின் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது இன்றியமையாதது.
Reviews
There are no reviews yet.