மதுரன் தமிழவேள்
3 Courses • 111 StudentsBiography
மரபு மற்றும் நவீனக் கவிதை வடிவங்களை நுட்பத்துடன் கையாளக்கூடிய, தனித்திறன் கொண்ட தமிழ்ப்பாவலர். ஓசையின் உயிர்ப்பும் படிமச் செழுமையும் ஆழமான மெய்யியல் நோக்கும் இவரது கவிதையின் அடையாளங்கள். சிக்கலான யாப்பு வடிவங்களைச் சிறப்பாகக் கையாளும் திறமைக்காக அறிஞர்களால் பாராட்டப்படுபவர். மகாகவி பாரதியை வழிகாட்டியாக வரித்துக்கொண்டார். எட்டாவது அகவையில் சந்தக் கவிதை எழுத ஆரம்பித்தார். கட்டளைக் கலித்துறை யாப்பில் மதுரன் தமிழவேள் 2019ம் ஆண்டு எழுதிய ‘தமிழ்த்தாய் அந்தாதி’ அதன் ஓசை நயத்துக்காகவும் கருத்துச் செறிவுக்காகவும் சந்தச் செழுமைக்காகவும் தமிழறிஞர்களாலும் கவிதைச் சுவைஞர்களாலும் வெகுவாக விதந்தோதப்பட்டது. புத்த பெருமானின் வாழ்க்கை வரலாற்றை ‘அறிவன் காதை’ என்ற பெயரில் காவியமாகவும் நாவலாகவும் எழுதி வருகிறார். ‘ஒளியின் மழலைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு 2005 திசம்பரில் – 22வது அகவையில் வெளியாகியது. நாவுயனே ஆரியதம்ம மகாதேரர் எழுதிய ‘ஆனபான ஸதி: சுவாச தியானம்’ என்ற பௌத்த தியான நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். முழுமையான தகவல் இங்கே: madhuramoli.com/about/